கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஓட்டல்கள், டீ கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரில் காலை, மதிய உணவு என்றால் அரசு மருத்துவமனை அருகே இயங்கும் அம்மா உணவகத்தை விட்டால் பொதுமக்களுக்கு வேறுவழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய உணவுகள் உரிய நேரத்தில் சுகாதாரமாகவும், தரமானதாகவும் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா என்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய வேலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயார் நிலையில் இருந்தன.