நாகப்பட்டினம்: தரங்கம்பாடி மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் ஆகியன மூலம் கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இதற்கு ஆதரவாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பகுதியைச் சேர்ந்த 20 கிராம மீனவர்கள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்திய விசைப்படகை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தரங்கம்பாடி மீனவர் கூட்டமைப்பு சார்பில் பலமுறை அரசுக்கும், மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். இச்சூழலில் ஜூலை 9ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் சுதர்மேன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவருடன் சக்திவேல், சுப்பிரமணியன், சின்னையன், அருண்குமார், ஆறுமுகம், திலீப் ஆகியோர் தரங்கம்பாடி அருகே சுமார் 6 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.