தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறையாரில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - Coronavirus Awareness

நாகப்பட்டினம்: பொறையார் பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.

கரோனா வைரஸ் விழிப்புணர்வு தரங்கம்பாடி கரோனா வைரஸ் விழிப்புணர்வு தரங்கம்பாடி பேரூராட்சி Coronavirus Awareness Tharangambadi Coronavirus Awareness
Tharangambadi Coronavirus Awareness

By

Published : Mar 21, 2020, 10:50 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள்

அதன் ஒரு பகுதியாக, பொறையார் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளில் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பான் மூலம் சுகாதார நடவடிக்கைள் மேற்கொண்டனர்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும், கரோனா தடுப்பு நடவக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:'கரோனாவா? மீன்பிடிக்கப் போ!' - தமிழ்நாட்டு மீனவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளும் அரேபியா!

ABOUT THE AUTHOR

...view details