தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் கைக்கட்டி நிற்பதா? தமிமுன் அன்சாரி கண்டனம்

நாகை: நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வேளாண்மை தொடர்பான மசோதா குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிமுன்
தமிமுன்

By

Published : Sep 19, 2020, 6:38 PM IST

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு வேளாண்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கின்றன.

இவை சாதாரண விவசாயிகளை கார்ப்பரேட் நவீன வலையில் சிக்கவைக்கிறது. விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய நலன்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு நமது விவசாயிகள் கைக்கட்டி நிற்கும் நிலையை இம்மசோதாக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.

இது குறித்து மாநில அரசுகளிடமும், விவசாய பிரதிநிதிகளிடமும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு அவசரப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இம்மசோதாக்களை அதிமுக ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள் சுட்டிக்காட்டும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இம்மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் பெரும் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details