இஸ்லாமியர்களின் பிரசித்திப்பெற்ற முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கக் கூடியது நாகூர் தர்கா. வருகின்ற 26ஆம் தேதி 463ஆம் ஆண்டு கந்தூரி விழா இங்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கந்தூரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
கந்தூரி விழா முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க தமிமுன் அன்சாரி கோரிக்கை இந்நிலையில், விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் தர்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது விழாவிற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி - இஸ்லாமிய சகோதரர்களின் மகத்துவம்