மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினமும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது. மற்ற மாதங்களில் விரதம் இருந்து திதி கொடுக்க இயலாத பக்தர்கள் அனைவரும் தை மாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். மேலும் தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி இன்று(பிப்.11) காமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி, உணவுகளை படைத்தும், எல், நவதானியம், யாகம் செய்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர். இதேபோன்று நாகப்பட்டினம் புதிய கடற்கரையிலும் ஏராளமானோர் திதி கொடுத்து புனித நீராடினர்.