நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் மார்ச் மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கி, மாவட்ட முகாம் அலுவலகமான மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரா.லலிதா பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தெற்கு வீதியில் இருந்த வணிகவரித் துறை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டு, ரூ.5 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வந்தது.