தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் அர்ச்சகர் வீட்டில் நகை - வெள்ளி பொருள்கள் கொள்ளை

நாகப்பட்டினம்: கோயில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அர்ச்சகர் வீட்டில் கொள்ளை
அர்ச்சகர் வீட்டில் கொள்ளை

By

Published : Sep 22, 2020, 9:33 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், அரசாணிக்குளம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேஷ்குமார். இவர் திருக்கண்ணங்குடி சிவன் கோயிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் திருக்கண்ணங்குடியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வாசல் கேட் பூட்டு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மாடியில் உள்ள அறையில் பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நெக்லஸ், மோதிரம், ருத்ராட்ச மாலை உள்ளிட்ட 40 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளும், வெள்ளி பொருள்களும் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து கணேஷ்குமார் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் நாகப்பட்டினத்திலிருந்து தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மோப்பநாய் அரசாணி குளம், தெற்கு வீதி வழியாக வந்து அங்குள்ள மெக்கானிக் கடை அருகே நின்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு கீழ்வேளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details