நாகை டவுனை அடுத்த அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சலீம் ராஜா. இவரது மகனான முகம்மது அனஸ் அந்தப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
மாணவனை அடித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - student
நாகப்பட்டினம்: மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பறையில் இல்லாததால், வகுப்பறையில் இருந்து வெளியேறி பக்கத்து வகுப்பு நண்பரகளுடன் பள்ளி வளாகத்தில் அனஸ் விளையாடியுள்ளார். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்த முகமது அனஸ், யூசுப், ஹரிபாலன் ஆகிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் முகமது அனஸுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நாகை சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.