தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது! - மயிலாடுதுறை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி மாணவி படிக்கவில்லை என்று கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆசிரியர்

By

Published : Sep 18, 2019, 12:35 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் பவித்ரா(8). இவர் இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், பவித்ரா பள்ளியில் சரியாக படிக்கவில்லை என ஆத்திரமடைந்த அப்பள்ளி அசிரியர் பாஸ்கர் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து காயமடைந்த மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர்

இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவி என்றும் பாராமல் படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியர் ஒருவரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details