நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
கோரிக்கை பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் - நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை கோட்டத்தில் 48 டாஸ்மாக் கடைகளில் கோரிக்கை பேட்ச் அணிந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வாரிசுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும், டாஸ்மாக் கடை மூடும் நேரத்தை மாலை ஐந்து மணியாக குறைக்கவேண்டும், ஊழியர்களுக்கு நோய் தடுப்பு கருவிகள் போதுமான அளவு வழங்க வேண்டும், மாத ரூ.10 ஆயிரம் கூடுதல் சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும், சட்ட விரோத ஆய்வு நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை கோட்டத்தில் 48 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமையில் பணியாற்றி வருகின்றனர்.