கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், மக்கள் பொது இடங்களில் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மதுபான கடைகளும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் இரவு நேரத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.