தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு! - Purchase of 26 thousand 619 metric tons of paddy

நாகப்பட்டினம்: நடப்பு குறுவை பருவத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது விவசாயிகளிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nagapattinam
nagapattinam

By

Published : Oct 13, 2020, 10:23 AM IST

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னை காரணமாக நெல் சாகுபடி பெரும் சவாலாக இருந்துவருகிறது. முப்போக சாகுபடி நடைபெற்ற இப்பகுதிகளில், தற்போது சம்பா, குருவை சாகுபடி மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுகிறது.

குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு1.32 லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றது. அதன்படி, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக கொள்முதல் சாதனையாக 32 ஆயிரத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அக்டோபர் மூன்றாம் தேதி என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததையடுத்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது. ஆனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடிக்கு கடைமடை பகுதிவரை காவிரி நீர் வந்து சேர்ந்தது.

அதன் பயனாக பல ஆண்டுகளுக்கு பிறகு டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டது.

காவிரி நீர் திறப்பு அவ்வப்போது தேவையான மழை என குறுவைக்கு தேவையான நீர் முழுமையாக கிடைத்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. நல்ல விளைச்சலால் அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவித்தது.

நெல்லை உலர விடும் விவசாயிகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 172 நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு குறுவை 9 ஆயிரத்து 278 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குவிண்டாலுக்கு ஆயிரத்து 868 ரூபாயுடன் ரூ. 50 கூடுதல் விலையுடன் ஆயிரத்து 918 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.

நெல் அறுவை செய்யும் இயந்திரம்

கடந்த ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் கூடுதலாக நாளொன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அக்டோபர் 11ஆம் தேதிவரை 26 ஆயிரத்து 619 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 51 கோடியே 89 லட்சத்து 99 ஆயிரத்து 220 ரூபாய் நேரடியாக நான்காயிரத்து 900 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதி

உலகையே உள்ளங்கையில் எளிதாக கொண்டு வந்து விட்டோம், உணவை உள்ளங்கைக்கு கொண்டுவரும் உழவனை காப்பாற்ற எவருமில்லை என்பதே நிதர்சனம். மாறி முப்போக சாகுபடிக்கு தமிழ்நாடு தயாராகும் என்றால் இந்தியாவின் முதுகெலும்பு நிமிர்ந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இதையும் படிங்க:தாய் இறந்த துக்கம் தாளாமல் தேம்பி அழுத முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details