தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகக்தின் நீராதார உரிமையை பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு - தமிமுன் அன்சாரி - தமிமுன் அன்சாரி காவிரி மத்திய அரசு

நாகப்பட்டினம்: காவிரி நிதிநீர் ஆணையம் மத்திய நீர்வள அமைச்சகத்தோடு இணைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தமிழ்நாட்டின் நீராதார உரிமையை அடியோடு பறிக்கும் செயல் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடுமையாகச் சாடியுள்ளார்.

tamimun ansari
tamimun ansari

By

Published : Apr 30, 2020, 9:46 AM IST

காவிரி நதிநீர் ஆணையம் மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக மனிதநேய ஜனநாயககட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

தமிழர்கள் கடும் போராட்டங்கள் வழியே பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம். அது ஒரு ஆறுதல் என்றாலும், முழு நம்பிக்கையை ஏற்படுத்திடவில்லை. ஏனெனில் இதுவரை அது கூடி கலையும் அமைப்பாகவே இருந்து வருகிறது. அது அணையின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் என்று நான் சட்டமன்றத்திலும் வாதிட்டுள்ளேன்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் அதனை மத்திய அரசு தனது ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் (நீர்வளத் துறை அமைச்சகம்) கீழ் கொண்டு வந்திருக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நதிநீர் பங்கீட்டு சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்து தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயமாக அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு செய்யும் முன்னோட்டமாகவே இதை பார்க்கிறோம்.

இதுவரை தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளை நிலைநாட்டும் விவகாரத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவும் எதுவும் உருப்படியாக செய்யவில்லை. இந்த சூழலில், அதை முழுமையான பொம்மை அமைப்பாக மாற்றுவதை ஏற்க இயலாது.

இது தமிழ்நாட்டின் நீராதார உரிமையை அடியோடு பறிக்கும் செயல். காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் அரைசதம் அடித்தது கரோனா! பொதுமக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details