தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிர்பான நிறுவனங்களுக்குத் தடைக்கோரி வணிகர் சங்கம் போராட்டம்

நாகை: நெகிழி பொருட்கள் மீதான தடையை ஒழுங்குபடுத்துதல், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா

By

Published : Jul 10, 2019, 8:38 AM IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாகை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, 'தமிழகத்தில் 14 வகையான நெகிழி பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை ஒழுங்குபடுத்தாமல் வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலை நீடிக்கும் என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகின்ற சூழலில், அந்நிய குளிர்பான நிறுவனங்கள் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பல லட்சக்கணக்கான தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். அவ்வாறு தடை செய்யாத பட்சத்தில் குளிர்பான நிறுவனங்கள் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'சில்லறை இணையம் வர்த்தகத்தை மத்திய அரசு அனுமதித்தால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details