தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் தீவிர சோதனை: வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - corona pudhucherry

கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு தெர்மல் மீட்டர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வாஞ்சூர் சோதனைச் சாவடி  தமிழ்நாடு புதுச்சேரி எல்லை  கரோனா அச்சம்  corona pudhucherry
கரோனா: தமிழ்நாடு- புதுச்சேரி எல்லையில் தீவிர சோதனை

By

Published : Mar 23, 2020, 1:05 PM IST

கரோனா அச்சத்தால் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லையான காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் தமிழ்நாடு வாகனங்களைத் தவிர மற்ற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காகக் காரைக்கால் செல்லும் நாகையைச் சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்கும் காவல் துறையினர், மருத்துவக்குழுவின் உதவியுடன் தெர்மல் மீட்டர் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகளைப் பரிசோதித்துவருகின்றனர். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிமாநிலப் பயணிகள் யாரேனும் வருகிறார்களா? என்பதைக் கண்டறிய சென்னை செல்லும் ஆம்னி பேருந்து பயணிகள் அனைவரும் பரிசோதனைசெய்யப்படுகின்றனர்.

கரோனா: தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் தீவிர சோதனை

இதேபோல், தமிழ்நாடு எல்லையான நாகூர் சோதனைச்சாவடியில் ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள் தெர்மல் மீட்டர் கருவி கொண்டு கரோனா கண்டறிதல் சோதனைசெய்யப்படுகின்றனர். பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்தபடியே பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா: ஆடம்பரமின்றி எளிமையாக நடந்த 16 திருமணங்கள்

ABOUT THE AUTHOR

...view details