ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றிற்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகையில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது. சென்னையில் மட்டும் 6 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் எவ்வாறு தேர்வு எழுத முடியும்? என்றார்.