மயிலாடுதுறை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த போல்வால்ட் வீராங்கனை பரணிக்கா கலந்து கொண்டார்.
அந்த போட்டியில் பரணிக்கா போல்வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் அந்தப் போட்டியில் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்தார்.
சர்வதேச போல்வால்ட் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை 3வது இடம் இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற 2022 சர்வதேச போல்வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பரணிக்கா மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்த ஜப்பான் நாட்டு வீராங்கனை 4.10 மீட்டர் உயரமும், இரண்டாம் இடம் பிடித்த மலேசிய நாட்டு வீராங்கனை 4 மீட்டர் உயரமும் தாண்டிய நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற பரணிக்கா 3.90 மீட்டர் உயரம் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசியக் கோப்பை தொடர்... இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விலகல்...