தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக மக்கள் கரோனா தொற்றிலிருந்து விடுபட வழிபாடு நடத்தினேன்:தமிழிசை - திருக்கடையூரில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

மயிலாடுதுறை: புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உலக மக்கள் கரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.

Puducherry Governor Tamilisai Soundarajan worship at Tirukkadaiyur Abirami Temple
Puducherry Governor Tamilisai Soundarajan worship at Tirukkadaiyur Abirami Temple

By

Published : Feb 21, 2021, 9:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கோயில் நிர்வாகம் சார்பாக ஆதினத்தின் மீனாட்சி சுந்தர தம்பிரான் தலைமையில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்ட தமிழிசை, கோயில் யானை, பசுவிற்கு திலகம் இட்டு மகிழ்ந்தார்.

திருக்கடையூர் அபிராமி கோயிலில் தமிழிசை வழிபாடு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "உலக மக்கள் கரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்தேன். கரோனா தடுப்பூசி ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து, நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுரிமை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "சட்டரீதியாக அனைவரும் பார்த்துக் கொள்வார்கள்" என்று அவர் பதிலளித்தார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

இதையும் படிங்க; சரித்திரம் மட்டுமே படைப்பேன், பிழை செய்யமாட்டேன்' - நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு தமிழிசை பதில்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details