மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் துணைத் தலைவர் ரகுநாதன் தலைமையில் நேற்று (செ.30) நடைபெற்றது.
அமைப்பாளர் காசி.வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் சிவநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பதிவுத்துறையின் செயல்பாடுகள், ஓய்வு பெற்றோரின் பணப் பலன்கள் உரிய காலத்தில் அளிக்கப்படாமை, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பதிவுத்துறையில் தீர்வு காணப்படாத நிலுவைகள், சேவை துறையாக இருந்து தற்போது வருவாய் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு பதிவு செய்ய வரும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் துறையாக மாறி உள்ள அவலம், பொதுமக்களை வதைக்காமல் அரசுக்கு வருவாய் பெற்று தரும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாநில அமைப்பாளர் காசி வெங்கடேசன் கூறுயதாவது, “பதிவுத்துறை பொதுமக்களுக்கு அவல நிலையை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றம், காவல்துறை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை ஆகிய துறைகளின் பணிகளை மட்டுமே பதிவுத்துறை செய்து வருகிறது.