தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆள வேண்டும்" - தமிமுன் அன்சாரி - அதிமுக பஜக் கூட்டணி குறித்து தமிமுன் அன்சாரி

தமிழகத்தில் திமுக, அதிமுக இடையேதான் அரசியல் போட்டி நிலவ வேண்டும் என மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர் சந்திப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 12:55 PM IST

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர் சந்திப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த வாணாதிராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தனது நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் நேற்று (டிச.10) பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்துள்ளது.இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலத்திலும் இதே நிலைதான்.

யார் ஆட்சியில் இருந்தாலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிரந்தர தீர்வு அமைத்துத் தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஒடிசா மாநிலத்தில் புயல் காலங்களில் பேரிடர் மேலாண்மை என்பது சிறப்பாகச் செயல்படுவது குறித்து பத்திரிக்கையில் காணமுடிகின்றது.

அவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. அது நமது எதிர்காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒன்றாக இருக்கக் கூடும். மேலும் இந்த புயல் பாதிப்புகளைச் சீர்படுத்த தமிழக முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டக் கூடியவை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:வெள்ளப் பாதிப்பால் சேதமடைந்த அரசு ஆவணங்கள், பள்ளி சான்றிதழ்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஏற்பாடு.. எந்தெந்த பகுதிகள்?

தொடர்ந்து பேசிய அவர், "சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறோம். அந்த வகையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தோம். மற்றபடி இது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பு அல்ல.

இம்மாதம் 21ஆம் தேதி, ஈரோட்டில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியானது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "தமிழகத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஒருவருக் கொருவர் ஒற்றுமையாக உள்ளோம். இதனை வட இந்திய அரசியலை உள்வாங்கிக் கொண்ட பாஜக கெடுக்க நினைக்கிறது.

அத்தகைய கட்சியில் இருந்து அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி உள்ளது உண்மையில் பாராட்டுக்குரியது. நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக போன்ற திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்ய வேண்டும். அரசியல் போட்டி அவர்களுக்கு மத்தியில் தான் இருக்க வேண்டும். அதுதான் தமிழகத்துக்கு நல்லது" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:சென்னை வெள்ள மரண எண்ணிக்கையை அரசு மறைக்கிறது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு..

ABOUT THE AUTHOR

...view details