தமிழ்நாடு ஹஜ் குழு மாநில சிறப்பு உறுப்பினராக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர் நஜூமுதீன் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில சிறப்பு உறுப்பினராக தமிழ்நாடு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்குப் பரிந்துரைத்த ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்காலத்தில் ஹஜ் பயணிகள் வசதிக்காக பல்லாவரத்திலிருந்து ஏர்போர்ட் செல்லும் வழியில் ஹஜ் ஹவுஸ் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதற்காக இடம் பார்க்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. அது விரைவில் கட்டப்பட வாய்ப்புள்ளது.