மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகள் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு! - Rs 1000 to rain affected ration card holders
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 16 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க 16 கோடியே 16 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.