இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். ஜூலை 28ஆம் தேதியன்று கோடியக்கரைப் பகுதியில் அவர் சக மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஆக.2) அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை நோக்கி சுட்டுள்ளனர்.
இதில், நாகையைச் சேர்ந்த கலைச்செல்வன் தலையில் குண்டுபட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை கரைக்கு கூட்டிவந்த சக மீனவர்கள் நகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவரை நேரில் பார்வையிட்ட நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: இழந்த நிலத்தை எப்போது மீட்போம் - ராகுல் காந்தி கேள்வி