தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் - மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

By

Published : Jan 6, 2022, 2:00 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.5) போராட்டம் நடத்தினர்.

அப்போது, தொடர் மழையினால் அழிந்துபோன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை இழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், 2020-2021இல் பிரீமியம் செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும்.

கோமாரி நோயால் இறந்துபோன கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளையும் போடவேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும், விவசாய சங்கத்தினருகும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு.. அசூர வேகத்தில் பரவும் கரோனா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details