நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தார் என்பது கந்தபுராண வரலாறு. புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் கந்தசஷ்டி பெரு விழா கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நாகையில் சிங்கார வேலவர் ஆலயத்தில் சாமி உலா! - Nagapattinam District News
நாகப்பட்டினம்: சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் வைரஅங்கி அலங்காரத்தில் ஆலய உட்பிரகாரத்தில் சாமி உலா நடைபெற்றது.
![நாகையில் சிங்கார வேலவர் ஆலயத்தில் சாமி உலா! நாகையில் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமி உலா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9589557-thumbnail-3x2-ngp.jpg)
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிங்கார வேலவர் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறும். இந்நிலையில், நான்காவது நாளான இன்று (நவ.19) சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் வைர அங்கி சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் படிச்சட்டத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் எளிய முறையில் நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பருவமழை பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ!