தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் நிச்சயமான பெண் மணமகனுடன் சென்றபின் பிணமாக திரும்பிய சோகம்! - மர்ம மரணம்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே பரசலூரில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட சித்ரா என்ற பெண், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம மரணம்

By

Published : Aug 17, 2019, 3:51 AM IST

மயிலாடுதுறை அருகே பரசலூர், ஓளவையார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் சித்ரா(32). இவர் பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ராஜ்குமாருக்கும் செப்.16ஆம் தேதி திருமணம் செய்வதாக, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ராஜ்குமார் திருச்சி சிறப்புக் காவல்படையில் காவலராக உள்ளார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு ராஜ்குமார், சித்ராவின் தாயார் ரேவதியின் அனுமதியோடு அவரை பலமுறை வெளியில் கூட்டிச்சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு சித்ராவின் வீட்டுக்கு வந்த ராஜ்குமார், இரவு 11 மணியளவில் சித்ராவை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மணமகனுடன் சென்று பிணமாக வீடு திரும்பிய சித்ரா

இந்நிலையில், மதியம் பரசலூருக்கு அவசர ஊர்தியோடு வந்த ராஜ்குமார், திருச்சியில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, சித்ராவின் உடலை வீட்டில் இறக்கி வைத்துள்ளார். இந்நிலையில், சித்ராவின் மரணத்தில் சதி இருப்பதாக கிராம மக்கள் செம்பனார்கோயில் காவல்துறையினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சித்ராவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்தது திருச்சியில் என்பதால் சித்ராவின் மரணம் குறித்து திருச்சி கன்டோன்மெண்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் சென்ற பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details