மயிலாடுதுறை:தலைஞாயிறு பகுதியில், என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அரவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சர்க்கரை ஆலையில் உள்ள ஊழியர்கள் வேறு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 27 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஊழியர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்
சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆலையினுள் கடந்த 25ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர்.
இதனையடுத்து, அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காத்திருப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலுவையிலுள்ள ஊழியர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், மூடப்பட்டுள்ள ஆலையை தமிழ்நாடு அரசு மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும்;
ஓய்வு பெற்ற ஊழியர்களின் அனைத்து பணப் பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் 12ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலை வளாகத்திலேயே கஞ்சி காய்ச்சி குடித்து, காத்திருப்புப் போராட்டத்தையும் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:தொடர்மழை காரணமாக தக்காளி விலை உயர்வு!