தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் அருகே திடீர் பள்ளம்: குடியிருப்புவாசிகள் அச்சம்!

நாகூர் தர்கா அருகில் உள்ள செய்யது பள்ளி வாசல் குளத்தின் சுற்றுச்சுவர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் சரிவு: குடியிருப்புவாசிகள் அச்சம்!
பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் சரிவு: குடியிருப்புவாசிகள் அச்சம்!

By

Published : Mar 7, 2021, 5:23 PM IST

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் அருகே பழமை வாய்ந்த செய்யது பள்ளி வாசல் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த ஆண்டிக்குளம் என்றழைக்கப்படும் செய்யது பள்ளி வாசலின் குளத்தில் மழை நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், திடீரென இக்குளத்தின் மேற்கு சுற்றுச்சுவர் உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்திற்குள்ளாகினர்.

பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் அருகே திடீர் பள்ளம்: குடியிருப்புவாசிகள் அச்சம்!

உடனடியாக அந்த சாலையின் போக்குவரத்தை துண்டித்த மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளம் ஏற்பட்ட பகுதியை மூங்கில் தடுப்புகள் கொண்டு அடைத்தனர். இந்த சாலை அதிக வாகனங்கள் வந்து செல்லக்கூடிய சாலை என்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அரசு அலுவலர்கள் பள்ளம் ஏற்பட்ட இடத்தை செப்பனிடும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க :இது விசிகவின் உத்தேச பட்டியல் இல்லை - திருமா மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details