தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் - கூடுதல் பேருந்துகளை இயக்குமா அரசு? - கூடுதல் பேருந்து இயக்குமா அரசு

நாகை: படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்குமா அரசு?

By

Published : Sep 19, 2019, 8:06 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாகையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதில் எட்டுக்குடி கிராமத்திலிருந்து திருக்குவளை, மேலப்பிடாகை, பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினம் செல்வதற்கு தினமும் ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இயங்கப்படுகிறது.

அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்தும், வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் மக்கள் என அதிகமானோர் அந்த ஒரே பேருந்தில் பயணிக்கின்றனர். இதனால் மாணவர்கள், மக்கள் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம்: கூடுதல் பேருந்து இயக்குமா அரசு?

அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் 30 கி.மீ தூரம்வரை படிக்கட்டிலேயே தொங்கியவாறு பயணம் மேற்கொண்டு ருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க...பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details