மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 35.40 மில்லி மீட்டர், தரங்கம்பாடியில் 11 மில்லி மீட்டர், சீர்காழி 63.8 மில்லி மீட்டர் கொள்ளிடம் 3.80 மில்லி மீட்டர், மணல்மேடு 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு காலை 8.15 மணிக்கு மேல் வந்துள்ளது. இதனிடையே ஏராளமான மாணவர்கள் மழையில் நனைந்த படி பள்ளிக்கு புறப்பட்டுவிட்டனர். அதன்பின் விடுமுறை அறிவிப்பை அறிந்து மீண்டும் வீடு திரும்பினர்.