மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2017-2018ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2017-2018 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
மயிலாடுதுறை: 2017-2018 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அப்போது, தங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததால் கல்லூரியில் நடைபெறும் இணைய வழிக் கல்வியை பெறமுடியவில்லை என்றும், அரசு மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி பெறுவதற்காக வழங்கிவரும் 2 ஜிபி சிம் கார்டுகளை பெற்றும் மடிக்கணினி இல்லாததால் இணையவழிக் கல்வியை பெறமுடியவில்லை என்றும் கூறினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக தங்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.