மயிலாடுதுறை:குத்தாலத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கல்லூரி திறக்கப்பட்டது. நிரந்தரக் கட்டடம் கட்டப்படாமல் அவசரகதியில் அறிவிக்கப்பட்டதால், வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இக்கல்லூரி தற்போது குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் இயங்கி வருகிறது.
இக்கல்லூரிக்குப் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டி கடந்த வாரம் அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அக்கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் மாணவர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வகுப்பறை இடப்பற்றாக்குறை காரணமாக, கல்லூரி கட்டடத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள தகரஷெட்டின்கீழ் மாணவர்கள் அமர்ந்து படித்து வந்துள்ளனர். அந்த இடத்தை கல்லூரி முதல்வர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இன்று பூட்டியுள்ளார்.