தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதிப்பெண் குறைந்ததால் பறிபோன மாணவியின் உயிர்!

நாகை: மதிப்பெண் குறைந்ததால் பதினோறாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Student's life lost in score
Student's life lost in score

By

Published : Jan 9, 2020, 9:08 AM IST

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த ப.கொந்தகை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜீவா, இவருடைய மகள் தீபிகா (வயது 15). இவர் திட்டச்சேரி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தீபிகா கடந்த மாதம் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் வெளியான தேர்வு முடிவுகளின்போது மதிப்பெண் குறைந்து வந்துள்ளதாக தனது சகதோழிகளிடம் கவலை தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் குறைந்ததால் வீட்டில் என்ன சொல்வது என்ற மனஉளைச்சலில் இருந்துள்ள அவர் கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து கடந்த மூன்றாம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது பேற்றோர்கள் சிகிச்சையை பாதியில் நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவி தீபிகா வீட்டிற்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுக்குறித்து திட்டச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வால்பாறையில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு - கத்தியால் குத்திக் கொன்றதாக காதலன் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details