தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்! - mayiladuthurai news

மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் பேருந்தில் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணிக்கும் மாணவர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கி செல்லும் மாணவர்கள்
மயிலாடுதுறையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கி செல்லும் மாணவர்கள்

By

Published : Jul 15, 2023, 12:16 PM IST

மயிலாடுதுறையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கி செல்லும் மாணவர்கள்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். பேருந்துகளின் பற்றாக்குறையால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலங்கள் தொடர் கதையாகவே உள்ளது.

இந்த நிலையில், சீர்காழியில் இருந்து திருவெண்காடு வழியாக பூம்புகார் செல்லும் ஏ5 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தில் பள்ளி, கல்லூரி முடிந்து மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் ஓட்டுநர்கள் பேருந்தினை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துடனே ஓட்டிச் செல்கின்றனர். மேலும், பள்ளி நேரத்தில் மட்டுமாவது கூடுதல் பேருந்துகளை மாணவர்கள் நலன் கருதி அரசு இயக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு போலீசார் பள்ளி நேரத்தில் மாணவர்கள் தொங்கி செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் வந்த தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டனர். தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை வந்த தனியார் பேருந்தில் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல், தருமபுரத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் ஏறினர். பேருந்தில் 130க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அதிக அளவில் பயணிகள் ஏறியதால் பேருந்து ஒரு பக்கம் சாய்வாக கவிழ்வது போல் அபாயகரமாக சென்றது. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையினர் மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் காலை, மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறையினர் அறிவுரை வழங்க வேண்டும் என்பதும், பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது மாணவர்கள் பேருந்து படியில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி வேலை நாட்களில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அரசு அறிவிக்கும் திட்டங்களை, அதிகாரிகள் 3 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details