மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுக்கா, கோவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்திகா என்ற மாணவி உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், ஒன்றிய, மாநில அரசுகள் மாணவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க செல்போன் மூலம் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்த்திகாவின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
மைனஸ் 2 டிகிரி குளிரில்...
ஒன்றிய, மாநில அரசுகளின் முயற்சியில் ஆர்த்திகா இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கோவாஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக வந்தடைந்தார். அவரை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதாமுருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதுகுறித்து மாணவி ஆர்த்திகா கூறுகையில், ”கார்கிவ்விலிருந்து போலந்து பார்டருக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். டிரான்ஸ்போர்ட் வசதி இல்லாததால் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களிடம் இருந்த பணத்தைக்கொண்டு தனியார் வாகனத்தில் சென்றாலும் எல்லைவரை இந்தியர்களை அவர்கள் கொண்டுவிடவில்லை.