வங்கக்கடலில் புதிதாக புரெவி என்ற புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று (டிச. 02) தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று காலை லேசான மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கநல்லூர், மணல்மேடு, பொறையார், பூம்புகார், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.