தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கைது! - முகநூலில் இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பரப்பியதாக புகார்

நாகப்பட்டினம்: இஸ்லாமியர்களைப் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கைது செய்யப்பட்டார்.

hindu
hindu

By

Published : Apr 11, 2020, 11:47 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன்(45). இவர் முகநூலில் இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பியதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் சாதிக் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி செயலாளர் கைது

அதனடிப்படையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதனை சீர்காழி காவல் துறையினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சீர்காழி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சுவாமிநாதனை 15 நாட்கள் நன்னிலம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details