நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.
இங்கு தற்போது பனை மரங்களில் பதநீர் இறக்கும் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பனைமரத்தின் பாலைகளில் மண் பானை கலசம் கட்டப்பட்டு காலை, மாலை நேரங்களில் பனை குருத்துக்கள் சீவப்பட்டு பானைகளில் சுண்ணாம்பு தடவி பதநீர் இறக்கப்பட்டு வருகிறது.