முன்னாள் எம்எல்ஏ திருவுருவப்படத்தை திறந்துவைத்த ஸ்டாலின் - காணொலிக் காட்சி மூலம் ஸ்டாலின் திறந்து வைப்பு
நாகப்பட்டினம்: மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்ட திமுக அவைத்தலைவருமான மீனாட்சி சுந்தரம் (84) உடல்நலக்குறைவால் செப்டம்பர் 21ஆம் தேதி காலமானார்.
அதனையடுத்து அவரின் படத்திறப்பு விழா வேதாரண்யத்தில் நடைபெற்றது. அதில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம், திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திமுக மாவட்டச் செயலாளர் கெளதமன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமராஜ், வேதரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் மறைமலை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.