மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில், வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் உரிமைக்காகத் தனது உயிரை அர்ப்பணித்த மனித உரிமைப் போராளி மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்க அஞ்சலி நடைபெற்றது.
பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டார்
அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த ஸ்டேன்சுவாமியின் போராட்ட பயணங்களையும், எதிர்கொண்ட சவால்களையும் எடுத்துக்கூறி புகழஞ்சலி செலுத்தினார்.