ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை: ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து ரயில்வே தொழிலாளர்களுடன், பொதுமக்களும் இணைந்து போராட வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா வலியுறுத்தினார்.
அப்போது பேசிய அவர், "ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் முதல்கட்டமாக இரண்டு ரயில்கள், தெற்கு ரயில்வேயில் 30 ரயில் நிலையங்கள் 45 வருட குத்தகைக்கு தனியாரிடம் தாரைவார்க்கப்படவுள்ளது. ரயில்வே தனியாரிடம் கொடுக்கப்பட்டால் ரயில் டிக்கெட்டின் விலை உயரும்,பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.மேலும் லாபகரமாக இயங்கி வருகின்ற ரயில்வே தொழிற் சாலை மற்றும் ரயில்வே துறையின் 49 சதவீத பங்குகள் தனியாருக்கு கொடுக்கவுள்ளது.
மத்திய அரசின் இப்போக்கை கண்டித்து விரைவில் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும், ரயில்வே தொழிலாளர்களுடன் இணைந்து, பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.