நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் மக்களுக்கு ஞானம், குழந்தை பாக்கியம் , எம பயம் நீங்கும் போன்ற பல்வேறு ஐதீகங்கள் உள்ளன.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல், இந்த ஆண்டும் இந்திரப் பெருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடள் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்நிலையில், 9ஆவது நாளான நேற்று திருத்தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.