தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை - மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த   நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர்  இன்று சிறை பிடித்துள்ளனர்.

Sri Lankan Navy arrested four nagai fishermen

By

Published : Oct 3, 2019, 4:42 PM IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து ராமு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கஜேந்திரன், ராஜேந்திரன், ஜெயராமனோடு ராமு ஆகிய நான்கு பேரும் நேற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் இன்று காலை வீடு திரும்பாத நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாத இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவது நாகை மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை மீனவர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details