ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா - GOWRI MARIYAMMAN TEMPLE
நாகை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயிலில் 53ஆம் ஆண்டு தீ மிதி உற்சவத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 53ஆம் ஆண்டு தீ மிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி பூச்சொரிதல் விழா உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, நேர்று நடந்த தீமிதி உற்சவத்தில் விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் சக்தி கரகம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர். சில பக்தர்கள் தங்கள் வாயில் 20 அடி நீள அலகு குத்திவந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திகடனை பூர்த்தி செய்தனர்.