தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஜப்பானியர் சாமி தரிசனம் - ஜப்பானியர் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 16 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

ஜப்பானியர் சாமி தரிசனம்
ஜப்பானியர் சாமி தரிசனம்

By

Published : Nov 5, 2022, 4:11 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 16 பேர் இன்று (நவ. 5) பஞ்சாட்சர ஹோமம், நவசக்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களை நடத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்கள் கடந்த ஒருவாரமாக பல்வேறு கோயில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாயூரநாதர் கோயிலில் மாயூரநாதர் சன்னதி, அபயாம்பிகை சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்து விபூதி அணிந்து, தரையில் விழுந்து வணங்கி வழிபாடு மேற்கொண்டனர்.

ஜப்பானியர் சாமி தரிசனம்

தமிழ்நாட்டில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் டாக்டர் சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில், டாக்டர் தக்காயுகி ஹோஷி என்பவரின் தலைமையில் இக்குழுவினர் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பானிய தொழிலதிபர்கள் பலர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சுவாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details