நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருப்புங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் தற்போது திருவெண்காடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தார்.
தந்தை இறந்த துக்கம் தாளாமல் உயிர்விட்ட காவலர்! - மாரடைப்பு
நாகை: சீர்காழியில் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.
இந்நிலையில் நேற்று (மே 30) அலெக்சாண்டரின் தந்தை லட்சுமணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அலெக்சாண்டர் தந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அலெக்சாண்டர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் அலெக்சாண்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை இறந்த அன்றே மகனும் இறந்தது உறவினர்கள், கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.