தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரஸ்வதி பூஜை: மயிலாடுதுறையில் சிறப்பு வழிபாடு! - மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள்

நாகை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சன்னதியில் சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Special rituals held at Mayiladuthurai for honor of goddess Saraswati

By

Published : Oct 7, 2019, 3:03 PM IST

கல்வியின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சரஸ்வதி பூஜையையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தில், தனிப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை ஆன்மிகப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள்

பின்னர், மகா தீபாராதனைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்று சரஸ்வதிக்கு சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க:ஆயுத பூஜை விற்பனை அமோகம்: களைகட்டும் கோயம்பேடு சந்தை!

ABOUT THE AUTHOR

...view details