தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவலோக நாதர் சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் - நாகை

நாகை: சீர்காழியை அடுத்துள்ள திருப்புன்கூர் சிவலோக நாதர் சுவாமி கோயிலில் மழை பெய்வதற்காக சிறப்பு யாகம் நடைபெற்றது.

temple

By

Published : May 4, 2019, 6:06 AM IST

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் சௌந்திரநாயகி அம்பாள் உடனாகிய சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்றதும், நந்தனாருக்காக நந்தி விலகி தரிசனம் அளித்த தலமான இங்கு பிரம்மா, இந்திரன், சூரியன், அகஸ்தியர், சுவாமியை பூஜித்து சாபம், பாவம் நீங்க பெற்றுள்ளனர்.

இந்த கோவிலில் மழை பெய்யவும், நிற்கவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவார பதிகம் பாட, மழை பெய்து நாடுசெழித்தது. அதற்கு மானியமாக 24 வேலி நிலத்தை சோழ மன்னர் கோயிலுக்கு வழங்கியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் நேற்று இந்து சமய அறநிலையதுறை உத்தரவின்படி மழை வேண்டி ருத்ர யாகம் மற்றும் வருண ஜபம் நடைபெற்றது.

மழை வேண்டி சிறப்பு யாகம்

இதனை முன்னிட்டு மகாமண்டபத்தில் 22 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம், ருத்ர பூஜை, வருண ஜபம் மற்றும் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

அதனையடுத்து நந்திதேவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி, ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details