தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை விரைவில் தனியாக செயல்படத்தொடங்கும் - சிறப்பு அலுவலர் லலிதா - special officer inspection for tempravary collector office

நாகை : மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் தனியாக செயல்படத்தொடங்கும் என மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தெரிவித்துள்ளார்.

special-officer-inspection-for-tempravary-collector-office
special-officer-inspection-for-tempravary-collector-office

By

Published : Dec 1, 2020, 5:28 PM IST

நாகை மாவட்டத்தில் இருந்த மயிலாடுதுறை கோட்டத்தை தனிமாவட்டமாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அரசானை வெளிடப்பட்டு எல்லை வரையரை பணிக்காக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ், எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு எல்லை வரையரை பணிகள் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியருக்கான தற்காலிக அலுவலகம் அமைப்பதற்காக பெரியகோவில் அருகே உள்ள வணிகவரித்துறை அலுவலகம் தேர்வு செய்யப்பட்டதால் வணிகவரித்துறை அலுவலகம் சித்தர்க்காட்டில் உள்ள அண்ணா திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான வசதிகள் செய்வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ், பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவு செயற்பொறியாளர் மோகனசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய லலிதா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கான தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான வேலைகள் தற்போது தொடங்கப்படவுள்ளது, பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் மயிலாடுதுறை மாவட்டம் தனியாக செயல்படத் தொடங்கும் என்றார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி ஒரு ஹை-பை முதலமைச்சர்- மா.சுப்பிரமணியன் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details